web log free
March 23, 2026

பதவியை இராஜினாமா செய்து வீடு சென்றார் பசில்

தனது இராஜினாமா கடிதத்தை கையளித்த பின்னர் பசில் ராஜபக்ஷ விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.

இதேவேளை, பசில் ராஜபக்ச பதவி விலகினாலும் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடர்வார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜயந்த கெட்டகொடவின் இராஜினாமாவை அடுத்து பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்ச பதவி விலகியதால் அந்த இடத்திற்கு கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd