web log free
May 14, 2026

ஜனாதிபதியிடம் தன்னை பிரதமராக நியமிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்த பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தன்னை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

21வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 69 இலட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் 300,000 வாக்குகள் கூட பெறாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளமை மக்களின் ஆணைக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd