கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் சர்வதேச ரீதியில் தட்டம்மை நோயானது, மும்மடங்கு அதிகரித்துள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஆபிரிக்காவில் தட்டம்மை நோயானது 700 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தட்டம்மை நோய்த்தொற்று, நுரையீரல் மற்றும் மூளையைப் பாதிக்கும் தீவிர நோய் நிலைமையை உருவாக்கக்கூடியதாகும்.
உக்ரைன், மடகஸ்கார் மற்றும் இந்தியாவில் தட்டம்மை நோய் அதிகம் பரவி வருவதுடன் மடகஸ்காரில் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இதுவரை குறைந்தது 800 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.