web log free
March 13, 2026

ரணிலுடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுக்க மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் முடிவு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் அரசியலில் இருந்து விலகியமையே இதற்குக் காரணம்.

தற்போது மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுன உறுப்பினர்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் பாரியளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரச்சினைகளை பேசுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் விரைவில் ரணில் விக்கிரமசிங்கவுடன் அரசியலில் உத்தியோகபூர்வமாக இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd