ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தம்மிக்க பெரேராவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலிலிருந்து தம்மிக்க பெரேராவை பாராளுமன்றத்திற்கு நியமிக்க எடுத்த தீர்மானம் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் மாவட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படும் வேட்புமனுக்களில் அல்லது தேசியப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தால் மாத்திரமே ஒருவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட முடியும்.
ஆனால், கடந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிலும் தம்மிக்க பெரேராவின் பெயர் இல்லாததால், அவரால் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க முடியாது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளருமான பாக்கியசோதி சரவணமுத்துவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.