கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு மறுவிற்பனை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக துறைமுக கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முனையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள போதிலும் கிரேன்கள் உள்ளிட்ட இயந்திரங்களை ஒழுங்குபடுத்துவதில் தாமதம் ஏற்படுவது சந்தேகம் என கூட்டமைப்பின் அழைப்பாளர் லால் பெம்கமகே தெரிவித்துள்ளார்.
துறைமுக வளாகத்துடன் கூடிய 13 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.