web log free
December 16, 2025

மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கியதில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு ( 218) பகுதியிலேயே மின்னல் தாக்கி மூன்று பேர் இறந்துள்ளனர்.

தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட நாட்களுக்கு பின்னரர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துவருகின்றது.

இந்த நிலையில் சுன்னாகம் குப்பிளான், மயிலங்காடு பகுதியில் நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சகோதரர்களான திருநாவுக்கரசு கண்ணன் (வயது- 48), கந்தசாமி மைனாவதி (வயது 52) மற்றும் ரவிக்குமார் சுதா (வயது 38) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd