web log free
June 30, 2026

பதுக்கிய டொலர்களை வெளியில் எடுக்க எரிபொருள் விற்பனை!

வெளிநாட்டு நாணயத்தில் பெறக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்குமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டு நாணயத்தில் மட்டுமே எரிபொருளை வழங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஒதுக்கும் வேலைத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் அதில் கணிசமான அளவு வெளிநாட்டு நாணயங்கள் பெறப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு நாணயங்கள் பல்வேறு நபர்களின் வசம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதால் அதனை வெளியில் எடுப்பதற்கு இந்த பிரேரணையை பரிசீலிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd