தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொள்வது அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, வர்த்தகர் தம்மிக்க பெரேரா நாளை நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவின் பெயர் ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் தீர்ப்பு வெளியாகும் வரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவிப் பிரமாணம் செய்யப் போவதில்லை என வர்த்தகர் தம்மிக்க பெரேரா உயர் நீதிமன்றில் நேற்று அறிவித்திருந்தார்.