இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வெளிநாட்டு உதவிகளை நாடியுள்ள நிலையில், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நன்கொடையாளர் மாநாட்டை நடத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
"வரலாற்று நட்பு நாடுகளாக இருந்த இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவின் ஆதரவு எங்களுக்கு தேவை," என்று அவர் கூறினார்.
இந்தியாவின் உயர்மட்டக் குழுவொன்று இன்று புது தில்லியில் இருந்து கூடுதல் ஆதரவைப் பெறுவதற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் அமெரிக்க கருவூலத்திலிருந்து ஒரு சிறப்புக் குழு அடுத்த வாரம் விஜயம் செய்யும் என்று விக்கிரமசிங்க கூறினார்.