சந்தையிலுள்ள மருந்து வகைகளின் விலைகளை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை இறுதிக்கட்டதை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் விலை கட்டுப்பாட்டுக்கு குழு இப்பணியில் ஈடுபட்டு வருவதுடன், அரசாங்கம் இதுவரை 73 மருந்து வகைகளின் விலைகளை ஒழுங்குறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, புற்றுநோயாளர்கள் பயன்படுத்தும் 95 சதவீதமான மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்வதுடன், புற்றுநோய் மருந்துகளுக்கான விலை மனுக்கோரலின் போது சமர்ப்பிக்கக் கூடிய உயர்ந்தபட்ச விலை 95 ரூபாயாகும் என்ற சுற்றுநிரூபத்தையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
மேலும் 27 மருந்து வகைகளின் விலைகளும் ஒழுங்குறுத்தப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்