கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான BA5 இலங்கையில் கண்டறியப்படவில்லையென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டில் புதிய வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என அவர் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் BA5 என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸை தான் உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் கூறினார்.
இந்த புதிய வைரஸ் 63 நாடுகளில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மற்ற வைரஸ்களைவிட இந்த வைரஸ் மிக வேகமாக பரவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.