web log free
April 06, 2026

நாடு திரும்பவுள்ள 48 இலங்கையர்கள்

தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர், எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு திரும்பவுள்ளனர்.

சுயவிருப்பின் அடிப்படையில் நாடு திரும்பும் இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL-138, UL-132 , UL-122 விமானங்களின் மூலம், மதுரை, திருச்சி, சென்னை விமான நிலையங்களின் ஊடாக, இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

நாடு திரும்பும் 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேரில், 23 ஆண்களும், 25 பெண்களும் அடங்கியுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd