web log free
March 09, 2026

வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய மொட்டு கட்சி எம்பி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார வியாழக்கிழமை (7) இரவு ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

களுத்துறை அங்குருவாதோட்டையில் சமய நிகழ்வு இடம்பெற்ற வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து எம்பி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd