web log free
May 17, 2026

அடுத்தக் கட்டம் குறித்து பேச இன்றும் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

நாட்டின் எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (11) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர், புதிய ஜனாதிபதியை நியமிப்பது மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகள் பல விசேட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd