web log free
February 07, 2026

வட்டவளை விபத்தில் 9 பேர் படுகாயம்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 9 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலி பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற குறித்த வேன், இன்று அதிகாலை 5.45 மணியளவில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த வேனில் பயணித்த 3 பெண்கள் உளிளிட்ட 9 பேரும் வட்டவளை வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஏனையவர்கள் தொடர்ந்தும் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

காலி பிரதேசத்தில் மரண வீடொன்றிற்கு சென்று விட்டு மீண்டும் ஹட்டன் நோக்கி பயணித்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 11 September 2019 01:52
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd