web log free
May 23, 2026

வைத்தியர் வேடமணிந்த பெண் கைது

வைத்தியர் வேடமணித்து எல்பிடிய வைத்தியசாலையில் நோயாளர் ஒருவரை பார்வையிட சென்ற யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை எல்பிடிய வைத்தியசாலை பொலிஸாரால் இந்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது உறவினர் ஒருவர் சுகயீனமுற்று குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் அவரை பார்வையிடுவதற்கு வைத்தியசாலை நுழைவாயில் காவலர்கள் அனுமதிக்கவில்லை எனவும் யுவதி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வைத்தியகர்கள் அணியும் நாடி துடிப்பறியும் கருவியினை அணிந்து வைத்தியசாலைக்குள் பிரவேசித்ததாக குறித்த யுவதி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த யுவதியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd