பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் சில பதிவுகளை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) பணிப்புரை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் வெளியிடப்படுவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்கள் ஊடாக சில நபர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செல்வாக்கு அல்லது அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சிப்பதாகவும், அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைக்கு இடையூறு விளைவிப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, பொது பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரையின் பிரகாரம், சமூக ஊடகங்களில் இதுபோன்ற அச்சுறுத்தல்களை உருவாக்கி வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளது