நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பிரதி மற்றும் உதவி அரசாங்க அதிபர்களை அரசாங்கம் நியமித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (27) நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து நியமனக் கடிதங்களை கையளித்துள்ளார்.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம் மற்றும் ஜயந்த கெட்டகொட ஆகியோர் பிரதி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோகிலா குணவர்தன, மதுர விதானகே மற்றும் திசுக்குட்டி ஆராச்சி ஆகியோர் உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அரசாங்கத்தின் பிரதம கொறடா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பிரதம அரசாங்கத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளருமான சமிந்த குலரத்ன, சபைத் தலைவரின் செயலாளர், பிரதமரின் மேலதிகச் செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்