நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால் ஊழல், மோசடிகளை இனங்காண வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தெஹிவளையில் நேற்று இடம்பெற்ற எலிய அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், “ஊழலை உயர் மட்டத்திலிருந்து ஒழிக்க வேண்டும். நியமிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள், தெரிவு செய்யப்படும் அதிகாரிகள் என அனைவரும், ஊழல் அற்றவர்களாக இருக்க வேண்டும்.
நாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த ஒழுக்கத்தைக் கட்டியெழுப்பாவிட்டால், அபிவிருத்தியை மேற்கொள்ள முடியாது” என்றார்.