web log free
June 28, 2026

சரத் பொன்சேகாவின் பதவி நிலைக்கு ஆபத்து!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இறுதிப் போராட்டத்துக்காக கொழும்புக்கு வருமாறும், உயிரை தியாகம் செய்தேனும் போராட்டத்தில் வெற்றிபெறுமாறும் அவர் விடுத்துள்ள அறிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

இராணுவத்தில் அதிஉயர் நிலையாக பீல்ட் மார்ஷல் பதவியை வைத்துக் கொண்டு வன்முறையை தூண்டும் வகையில் சரத் பொன்சேகா செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd