ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் விசேட திட்டமொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகம் ஜனாதிபதியிடம் பல திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பிளான் ஏ, பிளான் பி மற்றும் பிளான் சி ஆகிய 3 மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
எம்.பி.க்கள் பட்டியலின்படி, பிளான் ஏவுக்கு 25 எம்.பி.க்களும், பிளான் பிக்கு 20 எம்.பி.க்களும், பிளான் சிக்கு 16 எம்.பி.க்களும் இடம் பெற்றுள்ளனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்டத் தலைவர் பதவியை அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு வழங்க கட்சி தீர்மானித்துள்ளது.
மாத்தறை மாவட்ட தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும செயற்படுகின்றார்.
கடந்த வாரம் மொட்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் சர்வகட்சிப் பேச்சு மற்றும் பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், கட்சியின் எதிர்கால நிர்வாகம் மற்றும் கட்சியின் எதிர்காலம் குறித்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளார்.