web log free
March 31, 2026

இராஜாங்க அமைச்சர் பதவிகள் கேட்டு ஜனாதிபதிக்கு தொல்லை கொடுக்கும் மொட்டு கட்சியினர்

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தாமதமாகும் பட்சத்தில் விரைவில் இராஜாங்க அமைச்சர்களை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த முன்னணியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்கள் குழுவிற்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு கட்சியின் அங்கீகாரத்தின் கீழ் இடம்பெற்றதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd