web log free
April 28, 2025

ஜனாதிபதி ரணிலுக்கு நாமல் வழங்கியுள்ள அறிவுரை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதிலும் அது நடைமுறைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முன்மொழிந்த கட்சிகள் கூட இன்று அதற்கு இணங்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை இனியும் ஒத்திவைக்க முடியாது எனவும், எனவே ஜனாதிபதிக்கு பாராளுமன்றத் தேர்தலில் ஆதரவளித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து ஸ்திரமான அரசாங்கத்தை ஜனாதிபதி அமைக்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

இதன்மூலம் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு நியமித்தமை ஒப்பந்தம் காரணமாகவோ அல்லது வழக்குகளில் இருந்து தப்பிக்கவோ அல்ல என சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷ, நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய ஒரே நபர் அவர்தான் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக ஆதரவு கொடுக்க முடிவு செய்ததாகவும் போட்டியிட முன்வந்த டலஸ் அழகப்பெருமவை விட ரணில் விக்ரமசிங்கவுக்கு அரசியல் அனுபவம் அதிகம் என்றும், சர்வதேச சமூகத்தை கையாள்வதில் அவருக்கு இருந்த முதிர்ச்சி மிகவும் முக்கியமானது என்றும் எம்.பி. நாமல் குறிப்பிட்டுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd