இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 228 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்த 450க்கும் அதிகமானோர் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருவதாக ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
0112322485 என்ற இலக்கத்துக்கு அழைத்து குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், வெளிநாட்டவர்கள் தொடர்பில் விவரங்களை அறிந்துக்கொள்வதற்காக 0112323015 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்த 81 பேரின் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 110 சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், 28 சடலங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ராகம வைத்தியசாலையிலும் 7 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.