web log free
May 07, 2024

பல கட்டுமானத் துறை பொருட்களுக்கு நிர்ணய விலை

கட்டுமானத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை உயர்வுகளை அடுத்து, சீமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான பரிசீலனையை நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது.
பொருளாதார ஸ்திரமின்மைக்கு மத்தியில் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வர்த்தக அமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சந்தையில் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால் கட்டுமானத் துறையில் பல பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதற்கும் அதிகாரசபை ஆராய்ந்து வருகிறது.

2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022 ஜூன் வரை அரச மற்றும் தனியார் விநியோகஸ்தர்களால் விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் சிமெந்து மூடையின் சராசரி விலை 187 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 98 சதவீதம் அதிகரித்துள்ளதாக கட்டுமான கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.