web log free
November 29, 2024

புதிய அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஐநா மனித உரிமை பேரவையில் ஊக்குவிப்பு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இன்று (12) ஆரம்பமான சபை ஆரம்ப அமர்வில் இலங்கை தொடர்பான அறிக்கையை பதில் ஆணையாளர் நாதா அல் நஷீப், சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் நல்லிணக்கத்திற்கு தேவையான உரையாடலை உருவாக்குவதற்கும் புதிய அரசாங்கத்தை ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் சீர்திருத்தங்கள் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில், குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களின் சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 18 அன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மூலம் மூன்று மாணவர் செயற்பாட்டாளர் தலைவர்களை கைது செய்து காவலில் வைத்தது வருந்தத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd