web log free
October 18, 2024

ரயில் சேவைகள் இன்றைய தினமும் ரத்து

இன்று இரவு இடம்பெறவிருந்த தபால் ரயில் சேவை மற்றும் ஏனைய ரயில் சேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று இடம்பெற்ற 8 வெடிப்பு சம்பவங்களை அடுத்து ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக நேற்றைய தினம் இரவு ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டிருந்தன.

இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், இரவு ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.