தாமரை கோபுரம் அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு பிரவேசிக்கும் வகையிலான நுழைவுச்சீட்டொன்றின் பிரதி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
என்ற போதும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது போலி நுழைவுச்சீட்டு என கொழும்பிலுள்ள இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் தாமரை கோபுரத்திற்குச் சென்று, நுழைவுச்சீட்டுக்களை வாங்கி உங்கள் கண்களால் நீங்களை இதனை பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் இந்த விடயம் தொடர்பில் டுவிட்டரில் இலங்கைக்கான சீன தூதரகத்தால் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலவசமாக கட்டணம் செலுத்தாது பிரவேசிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.