web log free
March 24, 2026

இரு பிக்குகள் இடையே கத்திக் குத்துச் சண்டை!

பிலியந்தலை மடபட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இரண்டு பிக்குகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒரு பிக்கு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த பிக்கு மற்றொரு பிக்குவால் கத்தியால் குத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 58 வயதுடைய பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விகாரைக்கு கிடைத்த பிரிகாரம் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த வாள்வெட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd