web log free
April 06, 2026

உயிரிழந்தவர்களுக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலி

நேற்று முன்தினமான ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 8.30 மணிக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து வீடுகள் மற்றும் வாகனங்களில் வெள்ளைக் கொடியை பறக்கவிடுமாறும் இன்று மாலை 6.15 மணியளவில் அனைத்து வீடுகளிலும் விளக்கொன்றை ஏற்றிவைக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 11 September 2019 01:52
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd