ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கான விஜயத்திற்காக இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.
மேலும் 15 பேர் ஜனாதிபதியுடன் தூதுக்குழுவாகச் சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை 12.50 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் SK-469 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அதன்பிறகு, அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அந்தக் குழுவினர் ஜப்பானில் உள்ள டோக்கியோ சர்வதேச விமான நிலையத்துக்கு புறப்படுவார்கள்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இந்தக் குழுவினர் ஜப்பான் சென்றுள்ளனர்.
பிரித்தானியா மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதியின் முதலாவது வெளிநாட்டு விஜயம் அமைந்திருந்தது.