உலக சந்தையில் எரிபொருள் விலை குறைப்புக்கு ஏற்ப எரிபொருள் விலை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மேலும் குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று சூசகமாக தெரிவித்துள்ளார்.
டீசல் விலை ஏன் குறைக்கப்படவில்லை என SJB பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பெற்றோலின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டதாகவும் ஏனெனில் அதில் 70 ரூபாய் லாபம் கிடைத்ததாகவும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சமீபத்திய விலை திருத்தத்தின் போது டீசல் விலையை குறைக்க முடியாது ஏனெனில் டீசல் விற்பனையில் இருந்து 30 ரூபாய் லாபம் மட்டுமே கிடைத்தாகவும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையின் மொத்த எரிபொருள் தேவையில் 30 வீதம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் மூலம் உள்ளூர் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி செய்யப்படுவதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கு ஏற்ப எரிபொருள் விலையை குறைக்க முடியாது என்றார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் 14 அல்லது 15 நாட்களுக்குள் எரிபொருள் விலைகள் மேலும் குறைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.