டோக்கியோவில் உள்ள அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இலங்கையின் கடன் வழங்குநர்களின் கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்குவதற்கு ஜப்பான் இன்னும் உடன்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கடனாளிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஜப்பான் இணைத் தலைமை தாங்குவதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அறிவித்த ஒரு மணி நேரத்திற்குள் ஜப்பானின் இந்த நிராகரிப்பு ஏற்பட்டதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற இருதரப்பு கடன் வழங்குநர்கள் உட்பட சுமார் 30 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனைப் பற்றி இலங்கை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், அவர்களில் ஒருவர் பேச்சுவார்த்தையின் இணைத் தலைவராக இருக்கக்கூடும்.