web log free
April 25, 2024

பிரபல அரசியல்வாதிகள், கோடீஸ்வர வர்த்தகர்கள், வைத்தியர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது

வெளிநாடுகளிலும், பல்வேறு தொழில்களிடமும் பணத்தை வைப்புச் செய்து அதிக லாபம் தரும் தொகை தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய பெண்ணை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணை நேற்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு - உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியை ஆடம்பரமான அலுவலகம் நடத்துவதற்காக வாடகை அடிப்படையில் சந்தேக நபர் எடுத்துள்ளார்.

அதற்காக மாதம் 16 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.

வெளிநாட்டு தொழில் நிறுவனங்களின் பண டெபாசிட், ரத்தினம் மற்றும் நகைகளுக்கான டெபாசிட், வெளிநாட்டு கரன்சி முதலீடு போன்ற தொழில்களுக்கு அதிக லாபம் தரும் வட்டியை தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்தேக நபரின் நிறுவனத்தில் அதிக வட்டி பெறும் நோக்கில் கோடீஸ்வர தொழிலதிபர்கள், பலம் வாய்ந்த அரசியல்வாதிகள், பிரபல வைத்தியர்கள் உட்பட ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்திருந்தனர்.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி பணம் வழங்காதது தொடர்பாக சுமார் 10 தொழிலதிபர்கள் புகார் அளித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் மோசடியில் பிரபல அரசியல்வாதி ஒருவரும் சிக்கியுள்ளதோடு, குறித்த பெண் கைது செய்யப்பட்டதன் பின்னர், அவருக்கு எதிராகவும் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த பெண் 226 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அவுஸ்திரேலிய டொலர்கள் மற்றும் தங்கப் பொருட்களை மோசடி செய்துள்ளதாக வர்த்தகர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த சந்தேகநபர் தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றின் பாதுகாவலர்களை துப்பாக்கிகளுடன் பெற்றுக்கொண்டு அவர்களின் பாதுகாப்பில் பயணித்துள்ளார்.

இந்த பெண் நாட்டில் உள்ள பல பிரபல கோடீஸ்வரர்களுடன் டேட்டிங் செய்துள்ளதாகவும், அவர்களுடன் நேரம் செலவழித்த வீடியோக்களும் அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த காட்சிகள் மூலம் குறித்த நபர்களிடம் கோடீஸ்வரர்கள் பணம் பெற்றுக்கொண்டார்களா என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததுடன், சந்தேகநபருக்கு எதிராக தற்போது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தனர்.

மீண்டும் பணம் கோரிய வைப்பாளர்களுக்கு பெறுமதியான காசோலைகளை அவர் வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தொழிலதிபர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பணம் பறிக்கப்பட்டாலும் சந்தேக நபரின் கணக்கில் ரூ.35,000 மற்றும் ரூ.65,000 சிக்கியதும் தெரியவந்துள்ளது.

உண்மைகளை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.