web log free
December 06, 2025

அந்நியன் படத்தில் போல கோழி கறி பானைக்குள் விழுந்து கைதி ஒருவர் மரணம்

அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் 2001ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், தீக்காயங்களுக்கு உள்ளாகி 10 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கைதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து மன்னிப்புகளுடன் 2028 ஆம் ஆண்டில் விடுவிக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.

அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைச்சாலை அத்தியட்சகர் அந்த கைதியை சமயலறையில் வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி சக கைதி ஒருவருடன் அடுப்பிலிருந்து மற்றுமொரு கறியை எடுக்கும்போது அவரது கால் தவறி சிக்கன் கறிக்குள் தவறி விழுந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டதுடன், சிறைச்சாலை சமையலறையில் பணிபுரியும் போது ஏற்பட்ட விபத்தினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd