ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது தம்முடன் இருப்பதால் அவர் நல்ல விடயங்களையே கூறுகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
'ஒன்றாக எழுவோம் - களுத்துறையிலிருந்து ஆரம்பிப்போம்' என்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தற்போது சரியான பாதைக்கு வந்துள்ளார் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
ரணில் விக்கிரமசிங்க இந்த பயணத்தை தொடர ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
“ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம். அன்று ரணிலை திட்டினோம். ரணில் ஒரு ஐ.தே.க. இப்போது ரணில் எங்களுடன் இருக்கிறார். நாங்கள் இப்போது ரணிலுக்கு நல்லது சொல்கிறோம். ஏனென்றால் அவர் இப்போது சரியான பாதையில் திரும்பியிருப்பதாக அவர் நம்புகிறார். எனவே, நாங்கள் அவருக்கு ஆதரவளித்து, இந்தப் பயணத்தைத் தொடர உதவுகிறோம்” என்றார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'ஒன்றாக எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்' என்ற தலைப்பில் பேரணி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, பியல் நிஷாந்த, சனத் நிஷாந்த, அனுப பஸ்குவேல் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம், நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லோககே, சஞ்சீவ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் கலந்துகொண்டனர்.