அமைச்சரவை நியமனம் தொடர்பில் அரசாங்கத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக அமைச்சரவை நியமனம் நாளுக்கு நாள் தாமதமாகி வருகின்றது.
வெற்றிடமாக உள்ள 10 அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்கு 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தில் பெரும்பான்மையைக் கொண்ட மொட்டுவவைச் சேர்ந்த 10 சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெற்றிடங்களுக்கு ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அவர்களில் இருவரின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் துமிந்த திஸாநாயக்க, வஜிர அபேவர்தன, ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
வெற்றிடமாக உள்ள 10 அமைச்சுப் பதவிகளுக்கு 14 பேர் முன்மொழியப்பட்டுள்ளதால், அமைச்சரவை நியமனங்கள் தொடர்ந்தும் தாமதமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.