web log free
November 28, 2024

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

நேற்று (14) மாலை 4 மணி முதல் இன்று (15) மாலை 4 மணி வரை பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, இங்கிரிய பாலிந்தநுவர மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான அஹெலியகொட ஆகிய பகுதிகளுக்கே சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட ஹொரண பண்டாரகம, மில்லனியா மத்துகம, அகலவத்தை, காகலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, வரகாபொல மற்றும் ருவன்வெல்ல, இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, அலபாத்த, நிவித்திகல, கிரியெல்ல, அயகம, பெல்மதுல்ல மற்றும் குருவிட்ட ஆகிய இடங்களுக்கு இரண்டாம் நிலை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க மற்றும் பாதுக்க, காலி மாவட்டத்தின் பத்தேகம, களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை, பேருவளை, பாணந்துறை மற்றும் மதுராவளை மற்றும் கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல, தெரணியகல மற்றும் யட்டியந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்கள் மண்சரிவுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd