இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசியலமைப்பின் உத்தேச 22வது திருத்தத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கூறுகையில், குழுநிலையில் எந்தவிதமான மறுசீரமைப்புகளும் முயற்சிக்கப்படாமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி தனது ஆதரவை வழங்கியுள்ளது என அவர் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச இரண்டு முக்கிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு நல்லெண்ண அடிப்படையில் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
"முதலாவதாக, இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதைத் தடை செய்வதில் எந்த மாற்றமும் இல்லை, இரண்டாவதாக இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை மாற்றும் முயற்சியும் இல்லை" என்று அவர் கூறினார்.
இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க இணங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் தெரிவித்தார்.
"இது கட்சியால் கோரப்படும் பரந்த சீர்திருத்தம் இல்லையென்றாலும், ஐக்கிய மக்கள் சக்தி நாட்டின் நலன்களுக்காக நெகிழ்வாக இருக்க தயாராக உள்ளது" என்று பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.