web log free
May 15, 2026

இரட்டை பிரஜாவுரிமை கொண்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் - சன்ன ஜயசுமன

இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அவர்கள் பதவி விலக வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதைத் தடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமீபத்திய திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

"இந்த எம்.பி.க்கள் அரசியல் சாசனத்திற்கு மதிப்பளித்தால், அவர்கள் பதவி விலக வேண்டும்," என்று அவர் கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd