கோட்டா கோ ஹோம் போராட்டத்தின் பின்னணியில் நிரந்தரமாக மூன்று வகையான குழுக்கள் இருந்ததாகவும், மூன்றாம் தரப்பு யார் என்பதை தற்போதைக்கு வெளிப்படுத்த முடியாது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஏசியன் மிரருக்கு தெரிவித்தார்.
மூன்றாவது தரப்பினர் தொடர்பில் தன்னிடம் ஆதாரம் இல்லை என்றும், இரண்டு தரப்பினர் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் உறுதியாக இருந்ததாகவும், அதில் ஒன்று ரணில் விக்கிரமசிங்க என்றும், அந்தப் போராட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியதாகவும் எம்.பி. கூறினார்.
ரணில் விக்கிரமசிங்க இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கட்சி சார்பற்ற பொது மகன்கள், தெரியாமலும் சிலர் அறிந்தும் போராட்டத்தின் பின்னணியில் இருந்ததா அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவுக்குத் தெரியாமல் கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த ஓரிருவர் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாகவும் தனிப்பட்ட முறையில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அடுத்த நாட்டின் தலைமைத்துவத்தை பெறும் நோக்கில் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.