ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாரிய குழுவொன்று தயாராகவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொள்ளும் நம்பிக்கையில் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுமார் நாற்பது பேர் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இக்குழுவினர் ஏற்கனவே பல தடவைகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர், ஒரு குழுவுடன் இணைந்து செயற்படும் போது கட்சி மாறுவது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் புரிந்துணர்வுடன் செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.