எதிர்வரும் அமைச்சரவை மாற்றம் காரணமாக அமைச்சுப் பதவிகளை பெற்று, பெற்றுக்கொள்ளும் எம்.பி.க்கள் ஜனாதிபதிக்கு விசுவாசமானவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது கோரிக்கைகளை முன்வைப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவின் வீட்டுக்குச் சென்று தனது கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
தமக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களை பாதுகாக்க வேண்டும் என்பதே அமைச்சரின் பிரதான கோரிக்கையாகும்.
இதன்படி எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் அதே அமைச்சுக்களை தனக்கு பாதுகாத்து தரும்படி ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறு அமைச்சர் கூறினார்.
எவ்வாறாயினும், புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமித்து அமைச்சரவை விரிவாக்கமும், புதிய ஆளுநர்கள் பலரை நியமிப்பதும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இந்த நியமனங்களை உடனடியாக வழங்குமாறும் கூறியிருந்தது.
ஆனால் விரைவில் எந்த முடிவும் எடுக்கப்படாது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.