web log free
April 26, 2025

2022ல் இதுவரை 1400 வாகனக் கொள்ளைகள்-பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறும் பொலிஸார் வாகன சாரதிகளிடம் கோரிக்கை !

இலங்கை முழுவதும் வாகன கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மொத்தம் 1406 வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக எஸ்எஸ்பி தல்துவா தெரிவித்தார்.

திருடப்பட்ட வாகனங்களில் 12 பேருந்துகள், 25 வேன்கள், 16 லொறிகள், 14 கார்கள், 311 முச்சக்கர வண்டிகள், 1116 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 12 வகையான வாகனங்கள் அடங்குவதாக அவர் கூறினார்.

திருடப்பட்ட வாகனங்களில், பல வாகனங்கள் பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எஸ்எஸ்பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

வாகனத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறும் பொலிஸார் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd