அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அரச நிறுவனங்களுக்கு தலைவர்களையும் பணிப்பாளர்களையும் நியமிக்கும் போது, ஜனாதிபதிச் செயலாளரால் வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்துக்கு அமைய செயற்படுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.
அமைச்சுகளின் செயலாளர்களுக்கே ஜனாதிபதியால் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி நியமனங்கள் தொடர்பில், தகுதி நிலையைப் பரிசோதித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி செயலாளர் தலைமையிலான குழுவொன்றும், ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்டது.
இதன்படி, இவ்வாறு நயமிக்கப்பட உள்ளவர்களின் தகுதிகளை ஆராய்ந்து பரிந்துரை முன்வைப்பதற்காக அவர்களின் பெயர் விவரங்களை குறித்த குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும், அமைச்சுகளின் செயலாளர்களுக்கு, ஜனாதிபதி பணித்துள்ளார்.