நாட்டுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் நிலைக்கொண்டுள்ள போனி சூறாவளி, எதிர்வரும் 12 மணித்தியாலத்தினுள் கடும் சூறாவளியாக விருத்தியடைக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த சூறாவளி திருகோணமலையில் இருந்து சுமார் 660 கீலோமீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஊவா, சப்ரகமுவ, மத்திய, தென், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகளவான கன மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.