உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அரசியல் கட்சிகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்வது குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான அமைச்சர்களும் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பது மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய விரும்பாத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு உறுப்பினர்கள் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் சுதந்திர மக்கள் சபையில் இணைந்து கொள்வது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
சுதந்திர மக்கள் சபையின் எம்.பி.க்கள் ஒன்று கூடி கலந்துரையாடியுள்ளனர். அங்கு “இப்போது தேர்தல் கேட்க முடியாது” என சுட்டிக்காட்டியுள்ளனர். நாம் இப்போது அவர்களிடமிருந்து பிரிந்து இருக்கிறோம். அவர்களிடமிருந்து எங்களால் இலக்கை அடைய முடியவில்லை. எனவே, மக்களுக்காக உழைக்க, மக்கள் பிரச்னைகளை தீர்க்க, மக்கள் சபையில் தேர்தல் நடத்த ஒரு அமைப்பை உருவாக்குங்கள்.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் சுதந்திர மக்கள் சபையில் வேட்புமனுக்களை சமர்ப்பித்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.