இலங்கையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படும் செய்திகள் பொய்யானவை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
லிட்ரோ நிறுவனத்திடம் 2000 மெற்றிக் தொன்களுக்கும் அதிகமான எரிவாயு இருப்பதாகவும், இதுவரை சுமார் 28,000 மெட்ரிக் தொன்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2024 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு வரை மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் மீண்டும் எரிவாயு பிரச்சினை ஏற்படாது எனவும் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் முதித பீரிஸ் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அடுத்த எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) காலை அறிவிக்கப்படும் என்றார்.