வரவு செலவுத் திட்ட காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பார் என உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சரவையின் அளவை ஜனாதிபதி 30 ஆக அதிகரிக்க முடியும் எனவும் அரசாங்கத்தை நடத்துவதற்கு எஞ்சியுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை (நிரப்புமாறும்) பதவிப்பிரமாணம் செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, C.B. ரத்நாயக்க மற்றும் S.M. சந்திரசேனவுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் எனவும் சமகி ஜன பலவேகய (SJB) யின் சீட்டில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் அமைச்சரவைக்கு நியமிக்கப்படுவார்கள் என தெரியவருகிறது.(கெலும் பண்டார)